தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக உள்துறைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள உத்தரவு: திருச்சி ஆயுதப்படை டிஐஜி விஜயலட்சுமி, சென்னை ஊர்க்காவல்படை டிஐஜியாகவும், சிவகங்கை மாவட்ட எஸ்பி சிவபிரசாத், தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த அபிசேக் குப்தா, சிவகங்கை மாவட்ட எஸ்பியாகவும், சிபிசிஐடி மத்திய மண்டல எஸ்பி சண்முகப்பிரியா, மேற்கு மண்டல லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாகவும், ராமநாதபுரம் ராமேஸ்வரம் கூடுதல் எஸ்பி மீரா, தானியக்கமாக்கல் மற்றும் கணினிமயமாக்கல் பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: