முதியவரை துன்புறுத்தும் தவெக நிர்வாகி

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஏனாக்குடி கிராமத்தில் வசிப்பவர் ஜில்லா மணி. தவெக சீர்காழி ஒன்றிய துணை செயலாளராக இருந்து வரும் இவரும், மற்றொரு நபரும் மதுபோதையில் காரில் ஒரு முதியவரை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர்.

பின்னர் அவரது கைகளை இறுகப்பிடித்து கொண்டு ஆபாச வார்த்தைகளை பேசியபடி ஒருவருக்கொருவர் மாறிமாறி முதியவரை அடித்து துன்புறுத்துகின்றனர். இவர்களது பிடியில் இருந்து முதியவரால் தப்பிக்க முடியவில்லை. அவர்களும் விடாமல் சிறித்துக்கொண்டே அந்த முதியவரை தொடர்ந்து அடித்து துன்புறுத்துகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: