பிஎட் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நிறைவு

சென்னை: தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகள் என 21 அரசு கல்வியியல் கல்லூரிகளில் மொத்தம் 2040 இடங்கள் உள்ளன. இவற்றில் 2026-27ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கியது. இது நேற்றுடன் நிறைவடைந்தது.  அதன்படி பி.எட் படிப்புக்கு 5,900 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 3,036 பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.

இவர்களுக்கான தரவரிசை பட்டியல் வருகிற 31ம் தேதி வெளியிடப்படும். வரும் 4ம் தேதி முதல் 10ம் தேதிக்குள் மாணாக்கர்கள் விருப்ப கல்லூரியை தேர்வுசெய்ய வேண்டும். 14ம் தேதி இட ஒதுக்கீடு ஆணை வெளியிடப்படும். மாணாக்கர்கள் www.twise.ac.in என்ற இணையதளம் வாயிலாக பதவிறக்கம் செய்து கல்லூரியில் சேர வேண்டும். 24.8.2026 முதல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: