ஈரோடு, ஜூலை 18: ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் கருங்கல்பாளையம் சுப்பையா வீதியை சேர்ந்த பிரபு (38) என்பதும், அலுமினிய பாத்திரம் செய்பவர் என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். இதில் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பிரபுவை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
