மது குடிக்க பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

 

ஈரோடு, ஜூலை 20: ஈரோடு சூளை ஈ.பி.பி.நகர் கோட்டையார் பில்டிங்கை சேர்ந்தவர் சிவமணிகண்டன் (22). இவர் நண்பருடன் கடந்த 17ம் தேதி இரவு மாணிக்கம்பாளையம் காய்கறி மார்க்கெட் அருகே நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெருந்துறை சிலேட்டர் நகர் வசந்தம் பார்க்கை சேர்ந்த முகமது அலி ஜின்னா (40) மது குடிக்க சிவமணிகண்டன் மற்றும் அவரது நண்பரிடம் ரூ.1000 கேட்டுள்ளார். அதற்கு இருவரும் மறுத்துள்ளனர். ஆத்திரமடைந்த முகமது அலி ஜின்னா, இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

இருவரும் சத்தம் போட்டவுடன் பொதுமக்கள் வந்தனர். அவர்களிடமும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். மேலும் சிவ மணிகண்டன் மற்றும் அவரது நண்பரிடம் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டல் விடுத்தார். பின்னர் அங்கிருந்து சென்றார். இதுகுறித்து சிவமணிகண்டன், ஈரோடு வடக்கு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து முகமது அலி ஜின்னாவை கைது செய்தனர்.

 

Related Stories: