பாகிஸ்தானில் 24 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

 

பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 24 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ ஊடக பிரிவு வௌியிட்ட அறிக்கையில், “கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பதற்றம் நிறைந்த பன்னு மாவட்டம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது.

அதனடிப்படையில் பன்னு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டைகளின்போது 24 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் பல்வேறு பயங்கரவாத செயல்களிலும், பொதுமக்களை கொன்ற சம்பவங்களிலும் தொடர்புடையவர்கள்” என தெரிவித்துள்ளது.

Related Stories: