சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி: ஏராளமானோர் மாயம்

 

பெய்ஜிங்: தென்மேற்கு சீன நகரமான சோங்கிங்கின் பெங்ஷூய் மாவட்டத்தில் நேற்று காலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மலையின் ஒரு பகுதி குடியிருப்பு பகுதியில் சரிந்து விழுந்தது. இதில் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்ணில் புதைந்தன. இதில் இடிபாடுகளில் ஏராளமானவர்கள் சிக்கியுள்ளனர். இது குறித்த தகவலின்பேரில் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இடிபாடுகளில் சிக்கி 8 பேர் பலியாகி விட்டனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

நிலச்சரிவு காரணமாக 1,100-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். வுஜியாங் நதிக்கரையில் ஏற்பட்ட நிலச்சரிவு நடந்த இடத்தில் மீட்புப் பணியாளர்கள் மாயமானவர்களை தேடி வருகிறார்கள். இதுவரை 34 பேரை காணவில்லை. மலைப்பகுதியின் ஒரு பகுதி குடியிருப்புப் பகுதியின் மீது சரிந்து விழுவதை சீன ஊடகங்கள் வெளியிட்ட படங்கள் காட்டின. 800-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: