வாஷிங்டன்: அமெரிக்காவில் பல ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்த உயர்ந்த பணவீக்கத்தை தொடர்ந்து பணவியல் கொள்கை வகுக்கும் முறையை மறுவடிவமைப்பதை நோக்கமாக கொண்ட ஒரு விரிவான சீர்த்திருத்த திட்டத்தின் ஒரு பகுதியாகவும், வங்கியின் செயல்பாடுகளை மறுஆய்வு செய்வதற்காகவும் ஐந்து புதிய உயர்மட்ட பணிக்குழுக்களை பெடரல் வங்கி அமைத்துள்ளது.
இதில் ஒரு குழுவில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் மற்றும் டெல்லியில் பிறந்த அமெரிக்க பொருளாதார நிபுணரான ராஜ் செட்டி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஆஷா ஷர்மா ஆகிய இரண்டு இந்திய வம்சாவளி நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவர் கெவின் வார்ஷ் அறிவித்த ஐந்து குழுக்களின் ஒருபகுதியாக இந்த நியமனங்கள் அமைந்துள்ளன. இது குறித்து கெவின் வார்ஷ் கூறுகையில்,‘‘ இந்த முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் நமது இலக்குகளை அடைவதற்கு பெடரல் வங்கி சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்யவேண்டும்” என்றார்.
