புலவாயோ: ஜிம்பாப்வே அணியுடனான 2வது டி20 போட்டியில், வங்கதேசம் 34 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஜிம்பாப்வே வங்கதேசம் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கிறது. முதல் போட்டியில் ஜிம்பாப்வே 32 ரன் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்ய, வங்கதேசம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன் குவித்தது. சைப் ஹசன் 55, டன்சித் ஹசன் 58, யாசிர் அலி 22*, சைபுதின் 31* ரன் விளாசினர்.
அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே 19.4 ஓவரில் 152 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. வங்கதேச பந்துவீச்சில் ரிஷத் உசைன் 4, மெகதி ஹசன் 3, ராணா, சைபுதின், சைப் ஹசன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, கடைசி டி20 நாளை மாலை 4.00 மணிக்கு தொடங்குகிறது.
