இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்: அரியானாவில் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

சண்டிகர்: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் மோடி ஜிந்த் ரயில் நிலையத்தில் இன்று கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். அரியான மற்றும் பஞ்சாப் மாநிலத்துக்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது இரு மாநிலங்களிலும் சுமார் ரூ. 26000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். மேலும் பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகின்றார்.

அரியானா செல்லும் பிரதமர் மோடி, நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். ஜிந்த்-சோனிபட் இடையே இயக்கப்படவுள்ள இந்த ரயில் உலகின் மிக நீளமான, அதிக திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயில் திட்டங்களில் ஒன்றாகும். இதனைத்தொடர்ந்து ஜிந்த் நகரில் உள்ள ஏகலவ்யா மைதனாத்தில் ரூ.14700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

சண்டிகர் செல்லும் பிரதமர் ரூ.4700கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகின்றார். இதனைத்தொடர்ந்து பஞ்சாப் செல்லும் பிரதமர் மோடி, ஜலந்தரில் ரூ.5470கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், அவற்றுக்கான அடிக்கல்லையும் நாட்டவுள்ளார்.

அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் மறுமேம்பாடு செய்யப்பட்ட 75ரயில் நிலையங்களை ஜலந்தர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சுமார் ரூ.1570கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட இந்த நிலையங்கள், நவீன மற்றும் பயணிகள் -நட்பு வசதிகள் கொண்டவையாக மாற்றப்பட்டுள்ளன.

Related Stories: