மகாதேவ் பந்தய செயலி விவகாரம் நடிகையிடம் ஈ.டி விசாரணை

ராய்ப்பூர்: மகாதேவ் பந்தய செயலி மூலம் ரூ. 6 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. மகாதேவ் செயலியின் முக்கிய அமைப்பாளர் சவுரப் சந்திரகர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் 14-வது நபராக, ‘எபிக்ஸ் குரூப்’ தலைவர் விகாஸ் கார்க்கை அமலாக்கத்துறை சமீபத்தில் கைது செய்தது.

இந்த வழக்கில் நேற்று பிரபல நடிகையும், டிவி தொகுப்பாளினியுமான ஷபாலி பாகாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. கடந்த மே 30 அன்று டெல்லியில் உள்ள ஷபாலி பாகாவின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது அங்கிருந்து 30 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை அவரிடம் நேற்று விசாரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: