திரிணாமுல் பெண் எம்பி கோயல் ராஜினாமா

புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கோயல் மல்லிக் நேற்று ராஜினாமா செய்தார். அந்த கட்சியில் இருந்து விலகும் 4வது மாநிலங்களவை எம்பி கோயல் மல்லிக் ஆவார். மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோற்றதால் நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி. யுமான கோயல் மல்லிக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவர் மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேற்று சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். கடந்த ஏப்ரலில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோயல் மல்லிக் மூன்றே மாதங்களில் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

Related Stories: