மொரப்பூரில் சோகம்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை!

 

தருமபுரி: மொரப்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் படுத்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் மொரப்பூர் மணிலா நிலையம் அடுத்த ஆவலம்பட்டி பிரிவு சாலை அருகே ரயில் தண்டவாளத்தில், ஆண், பெண் உடல் துண்டாகி சிதறி கிடந்ததாக மொரப்பூர் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கிடத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தண்டவாளத்தில் ஆங்காங்கே சிதறிக் கிடந்த உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் சடலம் இருந்த இடத்திற்கு அருகில், இருசக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த வண்டி நம்பர் வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த எட்டிப்பட்டி கிராமத்தில் கன்சிராம் ராணா(19), அதே ஊரைச் சேர்ந்த அமுதபிரியா (எ) அறிவு ஜோதி(16), என்பதும், இருவரும் காதலித்து வந்ததாகவும், நேற்றிரவு முதல் இருவரும் காணாமல் போனதும் தெரியவந்தது. இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்து, இருவரும் அதிகாலை ரயில் தண்டாவளத்தில் படுத்து, தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ரயில் தண்டவாளத்தில் துண்டி சிதறிக் கிடக்கும் இருவரது உடலையும் கண்டு, உறவினர்கள் கதறி அழும் காட்சி நெஞ்சை பதபதைக்க வைக்கிறது. தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: