சென்னை: திருவல்லிகேணி விடுதியில் ரூ.11 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில், 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கத்தை கத்தையாகப் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் திருவல்லிக்கேணி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் அந்த விடுதிக்குச் சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள அறையில் தங்கியிருந்த சபீர் ரஹ்மான் என்பவரின் கட்டில் மெத்தைக்கு அடியில், கத்தை கத்தையாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்தம் 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ளநோட்டுகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஷபீக் ரஹ்மான் மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகிய இருவரைக் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவற்றைத் போலீசார் பறிமுதல் செய்து எண்ணிப் பார்த்தபோது, மொத்தம் 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, விடுதி அறையில் தங்கியிருந்த சபீர் ரஹ்மானைப் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்தக் கள்ளநோட்டுப் புழக்கத்தின் பின்னணியில் தஞ்சாவூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, தஞ்சாவூருக்கு விரைந்த போலீசார் ரவிச்சந்திரனைக் கைது செய்ததுடன், அவரிடமிருந்து 22.79 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளையும், 4 பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
