ரெட்டியார்சத்திரம்: கன்னிவாடி அருகே குரும்பப்பட்டி பட்டத்து விநாயகர் கோயில் தெருவில் ராஜேஷ் மனைவி சரோஜா (37) என்பவர் பெட்டி கடை நடத்தி வருகிறார். நேற்று வீட்டின் உள்ளே இருந்தவர்கள் மதிய நேரத்தில் பாட்டில் உடையும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது 2 பாட்டில்கள் பெட்ரோல் சிதறிய நிலையில் எரிந்து கொண்டிருந்தது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த சரோஜா இதுகுறித்து கன்னிவாடி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்ஐ கோமதி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் சீர்வரிசை அளித்த குடும்ப முன்பகையில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
