இந்திய அஞ்சல் சின்னம் வடிவமைப்பு போட்டி

 

கோவில்பட்டி, ஜூலை 16: இந்திய அஞ்சல் துறையின் நம்பகத்தன்மை, சேவை மனப்பான்மை மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் அதிகாரப்பூர்வ சின்னம் வடிவமைப்பதற்காக இந்தியா போஸ்ட் மஸ்கோட் டிசைன் போட்டி போட்டி MyGov இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது. இப்போட்டி ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறுகிறது. இந்தியக் குடிமக்கள் அனைவரும் வயது வரம்பின்றி இதில் பங்கேற்கலாம். சின்னம் வடிவமைப்பு போட்டியில் முதல், 2ம் மற்றும் 3ம் இடங்களைப் பெறுவோருக்கு முறையே ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசுகளுடன் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் சின்னத்திற்கு பெயர் சூட்டும் போட்டியில் முதல், 2ம் மற்றும் 3ம் இடங்களைப் பெறுவோருக்கு முறையே ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசுகளுடன் சான்றிதழ் வழங்கப்படும்.

பங்கேற்பாளர்கள் தாங்கள் வடிவமைக்கும் சின்னத்துடன் அதன் கருத்தை விளக்கும் குறிப்பையும், சின்னத்திற்கான பெயரையும் இணைத்து MyGov இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும். பொதுமக்கள், மாணவர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் படைப்பாற்றல் மிக்க அனைவரும் இப்போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று பரிசுகளை வெல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. போட்டி குறித்த கூடுதல் விவரங்களை MyGov இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். குளோரினேசன் பயிற்சி முகாம் விளாத்திகுளம், ஜூலை 16: விளாத்திகுளத்தில் பஞ். செயலர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்களுக்கு குளோரினேசன் பயிற்சி முகாம் நடைபெற்றது.

விளாத்திகுளம் யூனியன் அலுவலக வளாகத்தில் பஞ்சாயத்து செயலர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு குளோரினேசன் பற்றிய பயிற்சி முகாம் நடைபெற்றது. பிடிஓ தினகரன் தலைமை வகித்தார். முகாமில் தினமும் முறையாக குளோரினேசன் செய்வது பற்றியும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பராமரிப்பது, சுற்றிலும் தூய்மையாக வைப்பது, 15 நாட்களுக்கு ஒரு முறை தொட்டியை சுத்தம் செய்வது, குடிநீர் குழாய்களில் நீர் கசிவு மற்றும் பழுது இல்லாமல் பார்த்துக் கொள்வது, தேவையானவற்றை இருப்பு வைத்துக் கொள்வது, இருப்பு பதிவேடு பராமரிப்பு, தண்ணீரினால் ஏற்படும் நோய்கள் பற்றியும், அதனால் குளோரினேசன் செய்வதன் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.

இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பூச்சியியல் வல்லுநர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், கிராம பஞ்சாயத்து செயலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: