மதுக்கரை ஆர்டிஓ சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு: கணக்கில் வராத ரூ.1.25 லட்சம் பணம் சிக்கியது

 

மதுக்கரை: கோவை மதுக்கரை 2 ஆர்டிஓ சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புதுறையினர் அதிரடி ரெய்டு நடத்தியதில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்துக்கு 25 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கோவை அருகே மதுக்கரையில், சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில், தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சார்பில், வெளிநுழைவு மற்றும் உள் நுழைவு சோதனை சாவடிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு போலீசார் முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதிப்பதாக அடிக்கடி புகார் எழுந்தது.

இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புதுறையினர், ஆய்வாளர் பிரபுதாஸ் தலைமையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் வெளி நுழைவு மற்றும் உள் நுழைவு சோதனை சாவடிகளில் சோதனை நடத்தினர். இதில் உள் நுழைவு சோதனை சாவடியில் பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அருள்தாஸ் மற்றும் உதவியாளர்கள் கல்பனா, பத்மா ஆகியோர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ,1,18,000, வெளி நுழைவு சோதனை சாவடியில் பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் காசிலிங்கத்திடம் ரூ.7 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இந்த சோதனை மதியம் 12.30 மணி வரை நடந்தது.

Related Stories: