சினிமாவில் வருமான வரி செலுத்தாத களவாணி: விஜய் மீது ஆர்பி உதயகுமார் அட்டாக்

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசிய பேச்சு ஆணவத்தின் உச்சமாக இருக்கிறது. விஜய் வாயை திறந்தாலே கூவம் ஆற்றில் வரும் சாக்கடை தான் வெளியே வருகிறது. அண்ணா, எம்ஜிஆர் துவக்கிய திமுக, அதிமுகவை கூட்டு களவாணிகள் என்று ஒரு களவாணி சொன்னால் எப்படி இந்த நாடு ஏற்றுக்கொள்ளும்? ஒரு இயக்கத்தை நீங்கள் எப்படி கொச்சைப்படுத்தலாம்? அண்ணா, எம்ஜிஆர் தொடங்கிய கட்சிகளை நீங்கள் கூட்டுக் களவாணி என்று சொல்ல உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? சினிமாவில் நடித்து வருமான வரி செலுத்தாத களவாணி நீங்கள் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.

கரூரை சுடுகாடாக்கி விட்டு ஓடி ஒளிந்தவர் விஜய் என அனைவருக்கும் தெரியும். காமராஜர், ராஜாஜி, அண்ணா துவங்கி மு.க.ஸ்டாலின் வரை அமர்ந்த கண்ணியமிக்கது முதலமைச்சர் அரியாசனம். 80 ஆண்டு காலம் இந்த தலைவர்களின் வியர்வை, தியாகம் மறந்து களவாணி என்று ஒரு களவாணி சொன்னால் அதை இந்த நாடு ஏற்றுக்கொள்ளாது. பேரிடர், கொரோனா காலங்களில், மொழி, இனம், உரிமை காக்க எங்கும் உங்களை களத்தில் காணவில்லை. இப்போது முதலமைச்சராக எதையும் ேபசுவேன் என்று ஆணவத்தில் பேசினால், இனியும் நீங்கள் காட்டுக்கூச்சல் போட்டால், காட்டுக்குள்ளே அனுப்ப, தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Related Stories: