கரூர் உயிரிழப்பு சம்பவம் நடந்த அன்று சென்னைக்கு ஓடியவர் விஜய்தான்! – டி.கே.எஸ். இளங்கோவன் கடும் கண்டனம்

 

சென்னை: கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு, திமுக செய்தித் தொடர்புக்குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கடும் கண்டனம தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; இது அறைகுறை அறிவுள்ளவர்களுக்குக்கூட தெரியும். கரூர் விவகாரத்தில், 10 மணி நேரத்திற்கும் மேலாக குடிப்பதற்கு தண்ணீர் இன்றி இருந்ததால், மயக்கமடைந்துதான் விழுந்தார்கள். அதுவும் பல பகுதிகளில் மயங்கி விழுந்தார்கள். மற்றபடி எந்த தாக்குதலும் நடைபெறவில்லை. காவல்துறையால் வெளியிலிருந்துதான் பாதுகாப்பு வழங்க முடியும். கூட்டத்திற்குள் இருந்தவர்களுக்கு அருகில் இருந்தவர்கள்தான் பாதுகாப்பாக இருந்திருக்க முடியும். இது அறைகுறை அறிவுள்ளவர்களுக்குக்கூட தெரியும்.

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு த.வெ.கவினர் எந்த உதவியும் செய்யவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களைக் காப்பாற்ற திமுக அரசு செயலாற்றிக் கொண்டிருந்தபோது, விஜய் சென்னைக்கு தப்பி ஓடிவிட்டார். மக்களுக்கு என்ன ஆனது என்பது குறித்துகூட தவெக நிர்வாகிகள் கவலைப்படவில்லை. இதனையெல்லாம் திசைதிருப்பும் வேலையைத்தான் விஜய் செய்து வருகிறார் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; சட்டமன்றத்தில் ஆதாரம் இல்லாமல் பேசினால், எதிர்க்கட்சிகள் கேள்விதான் கேட்பார்கள். அதற்கு பதில் சொல்லவில்லை என்றால் வெளிநடப்பு செய்வார்கள்.

இது சட்டமன்ற மரபே தவிர, எதிர்க்கட்சிகள் ஓடவில்லை. பார்ட்டி பண்ட் பற்றி பேசுகிறீர்களே, தற்போது நடைபெறும் குதிரைப் பேரத்திற்கான பணம் எங்கிருந்து வருகிறது என்று பேசத் தயாரா? அதிமுகவை தீர்ந்த சக்தி என்று கூறும் விஜய், அந்தக் கட்சியில் இருப்பவர்களை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருப்பது ஏன்? கர்நாடகாவில் உள்ள கோவிலுக்குச் சென்றவர், அங்குள்ள முதலமைச்சரை சந்தித்து காவிரி நீர் குறித்து பேசாதது ஏன்? குதிரைப் பேரத்திற்கான பணம் எங்கிருந்து வருகிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: