கேடிசி நகர், ஜூலை 10: நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல மாம்பழச்சங்க பண்டிகை 3 நாட்களாக கோலாகலமாக நடந்தது. இதையொட்டி பாளை கதீட்ரல் பேராலயத்தில் நேற்று நடந்த 246வது ஸ்தோத்திர பண்டிகையில் திரளானோர் கலந்து கொண்டனர்.நெல்லை சிஎஸ்ஐ திருமண்டலத்தின் சார்பில் மாம்பழச்சங்க பண்டிகை கடந்த 7ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 2வது நாளாக நேற்றுமுன்தினம் (புதன்) மாம்பழச்சங்க பண்டிகை பாளை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. இதில் திருமண்டலத்தில் உள்ள பல்வேறு சபைகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஏழைகளுக்கு அரிசி மற்றும் காணிக்கை வழங்கினர். 3வது நாளான நேற்று (வியாழன்) 246வது ஸ்தோத்திர பண்டிகை பாளை கதீட்ரல் பேராலயத்தில் நடந்தது. இதில் திருமண்டலத்தை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் தங்களது ஒருநாள் வருமானத்தை காணிக்கையாக படைத்தனர்.
