லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாப பலி

 

கூடுவாஞ்சேரி, ஜூலை 10: வண்டலூர் அருகே மண்ணிவாக்கத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில், லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக பலியானார். இதில் லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  பெரம்பலூரை சேர்ந்தவர் ஜெயராஜ் (25), கொத்தனார். இவருக்கு லட்சுமி (24) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். சோழிங்கநல்லூர், காந்தி நகரில் உள்ள தனது மாமியார் வீட்டில் ஜெயராஜ் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், ஜெயராஜ் தனது பைக்கில் வாலாஜாபாத்தில் இருந்து வண்டலூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது பயங்கரமாக மோதியது.

இதில் லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே ஜெயராஜ் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரியில் உள்ள தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜெயராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து காஞ்சி
புரத்தை சேர்ந்த லாரி டிரைவர் முத்து (36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: