×

பெண் தூக்கிட்டு தற்கொலை

 

ராஜபாளையம், ஜூலை 10: ராஜபாளையம் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ராஜபாளையம் அருகே கோதைநாச்சியார்புரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(49). கொத்தனார். இவரது மனைவி ராமலட்சுமி(35). ஒரு மகள், மகன் உள்ளனர். ராமலட்சுமி சமீப நாட்களாக சற்றே மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய போலீசார் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் கிருஷ்ணசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

 

Tags : Rajapalayam ,Krishnasamy ,Kotainachiyarpuram ,Ramalakshmi ,
× RELATED ஸ்கூட்டர் டிக்கியில் வைத்திருந்த...