தேனி, ஜூலை 10: தேனி நகர் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இக்கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவு பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதை தொடர்ந்து கடைகளில் பயன்படுத்த கூடாத பிளாஸ்டிக் பொருட்களையும், அதற்கான மாற்று பயன்பாட்டு பொருட்களையும் பட்டியலிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக்கினால் ஆன சிறிய- பெரிய பைகள், கட்டப்பை ஆகியவற்றை பயன்படுத்த கூடாது. கறிக்கடைகளில் கறுப்பு நிற பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்த கூடாது. காய்கறி கடைகளில் மக்காத பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கயிறு போன்றவற்றை பயன்படுத்த கூடாது.
