×

அரசு கலைக் கல்லூரியில் அறிமுக பயிற்சி முகாம் நிறைவு விழா

 

காரைக்குடி, ஜூலை 10: காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான ஒரு வார கால அறிமுகப் பயிற்சி முகாமின் நிறைவு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் வசந்தி தலைமை வகித்தார். புவி அமைப்பியல் துறைத் தலைவர் முனைவர் உதய கணேசன் வரவேற்றார். வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் வேலாயுத ராஜா ஒரு வார காலம் நடைபெற்ற பயிற்சியின் சிறப்புகளை விளக்கினார்.கல்லூரியின் முன்னாள் மாணவரும், முன்னாள் எம்எல்ஏ மாங்குடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், இக்கல்லூரியில் படிக்கும் அரிய வாய்ப்பினை நீங்கள் பெற்றுள்ளீர்கள். இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றார்.

 

Tags : Government Arts College ,Karaikudi ,Alagappa ,Government ,Arts College ,Dr. ,Vasanthi ,
× RELATED ஸ்கூட்டர் டிக்கியில் வைத்திருந்த...