- தூய்மை இந்தியா
- விருதுநகர்
- நிலை
- வங்கி
- விருதுநகர் கன்செர்ட் ரோட்
- ரத்னம் கொடியேற்றல்
- பேட்ரியட் கிரவுண்ட்
விருதுநகர், ஜூலை 10: விருதுநகர் கச்சேரி சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஊர்வலத்தை இணை இயக்குநர் ரத்தினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, பழைய பஸ் ஸ்டாண்ட், தேசபந்து மைதானம் வழியாகச் சென்று தேசபந்து மைதானத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது.
இந்த ஊர்வலகத்தில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி, முதுநிலை புள்ளியியல் அலுவலர் சேதுமகேஸ்வரன், ஜிஸ்னுதாஸ், தர்மேந்தர் யாதவ் மற்றும் விருதுநகர் துணை மண்டல புள்ளியியல் துறை அலுவலர்கள் மற்றும் வி.வி.வி. மகளிர் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். ஊர்வலத்தின் போது, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்போம் என கோஷங்கள் எழுப்பினர்.
