தேவதானப்பட்டி, ஜூலை10: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் எஸ்.ஐ.,முருகபெருமாள் மற்றும் போலீசார் நேற்று நடுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை மறித்து சோதித்த போது அதில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி வந்தது தெரியவந்தது. போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து டிரைவர் நடுப்பட்டி காலனிதெருவைச் சேர்ந்த முனியசாமி(44) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
