×

பணிகள் முடிந்தும் பணம் கொடுக்காததால் விரக்தி சிவகாசியில் சுகாதார வளாகத்திற்கு பூட்டு போட்ட ஒப்பந்ததாரர்; திறந்த வெளியை பயன்படுத்தும் மக்கள்

 

ஏராளமான ஜவுளி கடைகள், ஓட்டல்கள் மற்றும் வணிக கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகளில் கழிப்பிட வசதிகள் இல்லாததால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சுகாதார வளாகம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பூட்டப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சுகாதார வளாகம் பணிகள் முடிந்த நிலையில் திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் சுகாதார வளாகம் திறக்கப்படாமல் உள்ளது. இதன்காரணமாக அந்தப் பகுதி மக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

Tags : Sivakasi ,
× RELATED ஸ்கூட்டர் டிக்கியில் வைத்திருந்த...