பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை

 

விளாத்திகுளம், ஜூலை 9: விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே என்.வேடப்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் (27). இவர், தந்தையின் டீக்கடையில் அவர் இல்லாத போது டீ போட்டுக் கொடுப்பது வழக்கம். அப்போது கடைக்கு வந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவனுக்கு, டீ, வடையை இலவசமாக கொடுத்து, பாலியல் ரீதியாக அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுபற்றி சிறுவன், தனது பெற்ேறாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் ராஜேசை கைது செய்தனர்.

 

Related Stories: