மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு:  இயக்குநரின் ஜாமீன் மனு தள்ளுபடி

 

சென்னை, ஜூலை 8: பொது மக்களிடம் ரூ.600 கோடி வரை வசூலித்து மோசடி செய்த மயிலாப்பூர் நிதி நிறுவனத்தின் இயக்குநரான தேவநாதன் யாதவின் கூட்டாளியான சுதிர் சங்கர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நான் நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். நிதி நிறுவனத்தில் இயக்குநர் பொறுப்பில் இருந்ததை தவிர வேறு எந்த தவறும் நான் செய்யவில்லை. எனவே, என்னை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தபோது பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி ஜாமீனில் விடுவிக்க கூடாது என்று கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தார்.

அவர் வாதிடும்போது, ஏராளமான ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரமான அவர்களின் மொத்த சேமிப்பை சூறையாடி, 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த நிறுவனத்தை திவாலாக்கியுள்ளனர். ஏற்கனவே விதித்த 100 கோடி டெபாசிட் நிபந்தனையை நிறை வேற்றவில்லை என்று வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன், சுதிர் சங்கரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: