பூந்தமல்லி, ஜூலை 8: வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த 99 வயது மூதாட்டி, உடல் நலம் பாதித்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அவரது பேரன் தர்மலிங்கம் (46), பாட்டிக்கு பாலியல் தொல்லை செய்துள்ளார். மூதாட்டி அலறல் சத்தம் கேட்டு, அதே வீட்டின் மேல் மாடியில் வசிக்கும் மூதாட்டியின் 2வது மகள் ஓடிவந்து, மூதாட்டியை மீட்டார்.
மேலும், வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார், மூதாட்டிக்கு பாலியல் தொல்லை செய்த தர்மலிங்கத்தை, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
