கர்நாடகா: கர்நாடகா மாநிலம் பாகல்கோட் அருகே அரசு பள்ளியின் இரும்பு கதவு விழுந்து 4 மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர். பள்ளியின் மெயின் கதவு விழுந்ததில் காயமடைந்த மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 3 முறை இரும்பு கதவு விழுந்த நிலையில் மீண்டும் விபத்து என பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.
