கொலை மிரட்டல் வழக்கில் தவெக அமைச்சர் மரிய வில்சன் ஆஜராக புதுவை நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி: கொலை மிரட்டல் வழக்கில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் நாளை (ஜூலை 04) புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

தொழில் போட்டி காரணமாக உடன் பிறந்த சகோதரர் மரி க்ளோத் வீட்டுக்குள் புகுந்து அவரையும் அவரது மனைவியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகப் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராக வேண்டும் என புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தவெக சார்பில் சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரிய வில்சன் தற்போது நிதியமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் அவர் குடும்ப பிரச்சனை காரணமாக புதுச்சேரி எழில் நகரில் வசித்து வந்த தனது உடன் பிறந்த சகோதரர் மரி க்ளோத் மற்றும் அவரது மனைவி கேரலினை வீடு புகுந்து கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மரி க்ளோத் மற்றும் அவரது மனைவி புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்ததன் அடிப்படையில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல், தாக்குதல், சொத்திற்கு சேதம் அளித்தல், ஆபத்தான ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், பெண்ணை அவமானப்படுத்துதல், கொள்ளை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கானது புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வழக்கு விசாரணை பலமுறை வாய்தா வழங்கப்பட்ட போதிலும் அமைச்சராக இருக்கக்கூடிய மரிய வில்சன் நீதிமன்றத்தி ஆஜராகவில்லை. இந்நிலையில் நாளை மரிய வில்சன் ஆஜராக அதிரடி உத்தரவைப் புதுவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

 

Related Stories: