சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,09,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.260க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,400க்கும், பவுனுக்கு ரூ.1200 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,07,200க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.250க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரித்து, பார் வெள்ளி ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனையானது.
இந்த நிலையில் நேற்று மாலையில் தங்கம் விலையில் திடீரென மாற்றம் காணப்பட்டது. அதாவது, நேற்று மாலை தங்கம் விலை மீண்டும் பவுனுக்கு ரூ.1200 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 8,400க்கு விற்பனையானது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் மாலையில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரித்து, பார் வெள்ளி ரூ.2.55 லட்சத்துக்கு விற்பனையானது.
