முருங்கை விளைச்சல் கடுமையாக பாதிப்பு

 

தேவாரம், ஜூலை 3: தேவாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தே.மீனாட்சிபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, கிருஷ்ணம்பட்டி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முருங்கை விவசாயம் அதிகமாக நடைபெற்று வருகின்றது. மேலும், தேவாரம், கோம்பை ராயப்பன்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு தேவாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள அதிகமான கிராமங்களில் முருங்கை விளைச்சல் சீடைப்புழு தாக்குதலால் அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

 

Related Stories: