ஆரணி அருகே அக்னி வசந்த விழா: துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

 

ஆரணி, ஜூலை 2: ஆரணி அடுத்த அடையபுலம் கிராமத்தில் பாஞ்சாலியம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா முன்னிட்டு கடந்த, 11ம் தேதி பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டு, அலகு நிறுத்தப்பட்டு மகாபாரத சொற்பொழிவு விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி திருவிழா நடந்தது. அப்போது கோயில் வளாகம் முன்பு களிமண்ணால் பெரியளவில் துரியோதனன் உருவபொம்மை அமைத்து, பல்வேறு வண்ணங்கள் பூசப்பட்டது. மேலும் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டது.

தொடர்ந்து, துரியோதனன், பீமன் வேடம் அணிந்து நாடக கலைஞர்கள் துரியோதனனை பீமன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் குழந்தை வரம் வேண்டு விரதமிருந்து நேர்த்திகடன் செலுத்தினர். இதைதொடர்ந்து, மாலைதீமிதி திருவிழாவில், காப்பு கட்டிய பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விரதமிருந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிப்பட்டனர். முன்னதாக, ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சுவாமி தரிசனம் செய்தார். இதில் ஆரணி சுற்றுட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 

Related Stories: