ரூ.2500 எப்போ வரும்? ‘தொண்டை ப்ராப்ளம்’னு எஸ்கேப்பான அமைச்சர்

விருதுநகர்: மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது வழங்கப்படும் என்ற கேள்விக்கு, ‘தொண்டை சரியில்லை’ எனக்கூறி அமைச்சர் ஜெகதீஸ்வரி எஸ்கேப்பானார். நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது, தவெக சார்பில் மகளிருக்கு ரூ.2,500 உரிமைத் தொகை வழங்கப்படும், ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடந்தது.

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் நகராட்சி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை அமைச்சர் ஜெகதீஸ்வரி நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர், அமைச்சரிடம் செய்தியாளர்கள், ‘‘தவெக தேர்தலின் போது வாக்குறுதி அளித்தபடி மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 எப்போது வழங்கப்படும்’’ என கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி, ‘தொண்டை சரியில்லை…’ என கூறி விட்டு அங்கிருந்து எஸ்கேப்பானார்.

Related Stories: