துப்பாக்கிகளை காட்டி தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டகாசம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாக் ஜலசந்தி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. கச்சத்தீவு – நெடுந்தீவு இடையேயான கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென சிறியரக ரோந்து படகுகளில் அங்கு வந்து சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி மீனவர்களை விரட்டினர்.

மேலும் படகுகளை சிறைபிடிக்கும் நோக்கில் பெரிய ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் தொடர்ந்து விரட்டியதால் அச்சமடைந்த மீனவர்கள் அவர்களின் பிடியில் சிக்காமல் தப்பினர். ஒரு சில படகுகளில் வலைகள் சேதமடைந்தன. இலங்கை கடற்படையின் இந்த அச்சுறுத்தல் நடவடிக்கையால் பல மீனவர்கள் மீன்பிடியை நிறுத்தி விட்டு கரை திரும்பினர். இலங்கை கடற்படை விரட்டியடிப்பு சம்பவம் குறித்து மீன்வளத்துறை மற்றும் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: