சில்லிபாயின்ட்…

* இங்கிலாந்து அணியுடன் நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வரும் 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 438 ரன் குவித்து ஆல் அவுட்டானது. முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 361 ரன் எடுத்திருந்த நியூசி. நேற்று மேற்கொண்டு 77 ரன் மட்டுமே சேர்த்து 6 விக்கெட்டை பறிகொடுத்தது. தொடக்க வீரர்கள் கேப்டன் லாதம் 151, கான்வே 157 ரன் விளாசிய நிலையில் மற்றவர்கள் பெரிதாகக் கை கொடுக்கவில்லை. இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்டோக்ஸ் 4, ஆர்ச்சர், பஷிர் தலா 2, அட்கின்சன், ரூட் தலா 1 விக்கெட் சாய்த்தனர். தொடர்ந்து இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

* வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆன்டிகுவா விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் டெஸ்டில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 308 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. சண்டிமால் 54, கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 120, சோனல் தினுஷா 43, மிலன் ரத்னாயக 27 ரன் விளாசினர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கிரீவ்ஸ் 3, ரோச், அல்ஜாரி ஜோசப், ஷமார் ஜோசப் தலா 2, ஜேடன் 1 விக்கெட் எடுத்தனர்.

* இலங்கை-ஏ அணியுடன் காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் முதல் டெஸ்டில் (4 நாள் போட்டி), இந்தியா-ஏ அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 452 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. சுதர்சன் 132, கேப்டன் துருவ் ஜுரெல் 141*, ரஷீத் 63, ஹர்ஷ் துபே 30 ரன் எடுத்தனர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை-ஏ 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 113 ரன் எடுத்துள்ளது. இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: