சுவிட்சர்லாந்து, போஸ்னியா வெற்றி: அடுத்த சுற்றுக்கும் தகுதி

 

கனடாவின் பிசி பிளேஸ் மைதானத்தில் நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கி நடந்தபோட்டியில் பி பிரிவில் சுவிட்சர்லாந்து -கனடா அணிகள் மோதின. இதில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 2வது பாதி தொடங்கிய உடனே, ஆட்டத்தின் 46வது நிமிடத்தில் சுவிஸ் வீரர் ரூபென் வர்கஸ்கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து 57வது நிமிடத்தில், பிரீல் எம்போலோவின் உதவியோடு சுவிஸ் இளம் வீரர் ஜோஹன் மன்சாம்பி கோல் அடித்து முன்னிலையை 2-0 என பலப்படுத்தினார்.

76வது நிமிடத்தில் கனடாவின் பிராமிஸ் டேவிட் பதில் கோல் அடித்தார். இருப்பினும், சுவிஸ்சின் பலமான தடுப்பாட்டத்தால் கனடாவால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் சுவிஸ் வெற்றிபெற்றது. 7 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து ‘ரவுண்ட் ஆப் 32’சுற்றுக்குள் நுழைந்தது. தோல்வியுற்ற போதிலும் கனடா 4 புள்ளிகளுடன் 2ம் இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதே பிரிவில் மற்றொரு போட்டியில் போஸ்னியா & ஹெர்சகோவினா-கத்தார் அணிகள் மோதின.

இதில் ஆதிக்கம்செலுத்திய போஸ்னியா 3-1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் போஸ்னியா & ஹெர்சகோவினா 4 புள்ளிகளுடன் பிரிவில் 3வது இடத்தைப் பிடித்து, அடுத்த சுற்றான ‘சுற்று 32’ (Round of 32) நிலைக்குச் செல்லும் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. கத்தார் அணி 1 புள்ளியுடன் கடைசி இடத்தைப் பிடித்து தொடரை விட்டு வெளியேறியது.

Related Stories: