* 2026-2027 உள்ளூர் கிரிக்கெட் சீசனுக்கான தமிழ்நாடு அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் யோ மகேஷ் (38 வயது) நிமியமிக்கப்பட்டுள்ளார்.
* நடப்பு உலக கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் அணி வீரர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அமெரிக்க அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பயிற்சி முகாம், ஓட்டல் வசதி கூட இல்லாமல் ஒவ்வொரு போட்டிக்கும் அலைக்கழிக்கப்பட்டு வந்த ஈரான் வீரர்கள் இந்த அறிவிப்பால் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
* தற்போது தனது 6வது உலக கோப்பையில் விளையாடி வரும் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி (38 வயது), அடுத்து 2030ல் ஸ்பெயினில் நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் விளையாடுவாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ‘இன்னும் சில காலம் தொடர்ந்து விளையாடுவேன். நல்ல உடல்தகுதி மற்றும் அணிக்காக சிறந்த முறையில் பங்களிக்க முடியும் வரை எனது ஆட்டம் தொடரும்’ என்றார்.
* 2026 விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர், ஜூன் 29ம் தேதி தொடங்கி ஜூலை 12ம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு நடைபெற உள்ளது. தற்போது இத்தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (44 வயது) ஒயில்டு கார்டு சிறப்பு அனுமதியுடன் மீண்டும் களமிறங்க உள்ளார். நீண்ட நாட்களாக நம்பர் 1 வீராங்கனையாக நீடித்து 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்ற மகத்தான சாதனையாளரான செரீனா, 2022ல் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
