அப்பாவை காணோம்… மகன், மகளின் தேடல்: நெல்லையில் பரபரப்பு போஸ்டர்

நெல்லை: அப்பாவை காணோம்… மகன், மகளின் தேடல் என்று நெல்லையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் சட்டசபையில் சில நாட்களுக்கு முன்பு அப்பாவை காணாமல் சிலர் தேடி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து மறைமுகமாக விமர்சனம் செய்தார். இதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சமூக வலைத்தளங்களில் திமுகவினர் உள்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தும், வீடியோக்களை வெளியிட்டும் வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லை மேற்கு மாவட்ட கடையம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன் பெயரில் கடையம் பாவூர்சத்திரம், தென்காசி பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் அப்பாவை காணும் – மகன், மகளின் தேடல் என்று அச்சிடப்பட்டு அதன் கீழ் இரண்டு குழந்தைகள் கையில் மண்ணெண்ணெய் விளக்கை ஏந்தியபடி தேடிச் செல்வது போல் படம் உள்ளது. இந்த போஸ்டர் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: