சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 23ம் தேதி சென்னை மதுரை உள்பட 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். 2017ல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ஓஎம்ஆர் ஷீட் குளறுபடி தொடர்பாக ED சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில் ரூ.20 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளின் ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. தேர்வர்களை அணுகி தலா ரூ.14 முதல் 16 லட்சம் வரை பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வழக்கில் தொடர்புடைய 56 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
