தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர்களாக வழக்கறிஞர்கள் பரணிதரன் பி.எஸ்.அமல்ராஜ் தேர்வு: முதல் வாக்கு அடிப்படையில் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 25 உறுப்பினர்களில் 7 உறுப்பினர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 2 பேர் நியமன உறுப்பினராவர். மொத்தம் 143 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்த வாக்காளர்களான 1 லட்சத்து 539 பேரில் 81,940 பேர் வாக்களித்தனர். இதையடுத்து வாக்கு எண்ணும் பணி ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கியது.

இதுவரை முதல் வாக்கு அடிப்படையிலான எண்ணிக்கையில் நாமக்கல்லை சேர்ந்த வழக்கறிஞர் பரணிதரன் 3889 வாக்குகளும், பார்கவுன்சில் தலைவராக இருந்த வழக்கறிஞர் பி.எஸ்.அமல்ராஜ் 3040 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதையடுத்து, உறுப்பினர் தேர்வுக்கான வாக்குகளை பெற்ற இருவரும் உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 21 பேருக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.

Related Stories: