உத்தரபிரதேசம்: உலக கோப்பை இறுதி போட்டி லக்னோவில் நடந்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என்று அகிலேஷ் யாதவ் கூறினார். இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே உலக கோப்பை இறுதி போட்டி குஜராத் மாநிலம் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. முதலில் விளையாடிய இந்தியா 240 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இதனால் இந்திய ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர். போட்டி குஜராத்தில் நடைபெற்றதாலும், பிரதமர் மோடி நேரில் பார்க்க சென்றதனாலும் இந்திய அணி தோல்வியடைந்ததாக அரசியல் சார்பில் விமர்சனம் வைக்கப்படுகிறது.
மேலும், ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்யும்போது மிகவும் மெதுவாக இருந்தது. பின்னர், இரவில் விளையாடும்போது பேட்டிங் செய்வதற்கு சிறப்பாக இருந்தது என்ற விமர்சனம் மெல்லமெல்ல எழுந்து வருகிறது. அதே நேரத்தில், ராஜஸ்தானில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி பேசும்போது, பிரதமர் மோடி குறித்து விமர்சித்தார். அதாவது பிரதமர் மோடி, துரதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டத்தை வரவழைப்பவர் என்ற அர்த்தத்தில் பேசினார். இதற்கு பாஜவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில் ‘உலக கோப்பை இறுதி போட்டி குஜராத்தில் நடந்தது. இது லக்னோவில் நடந்திருந்தால் இந்திய அணிக்கு அதிகளவில் ஆசீர்வாதம் கிடைத்திருக்கும். லக்னோவில் போட்டி நடைபெற்றிருந்தால் கடவுள் விஷ்ணு மற்றும் வாஜ்பாய் ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்கும். இந்தியா வெற்றி பெற்றிருக்கும். தற்போது, ஆடுகளம் குறித்த சில பிரச்னைகளை கேட்க முடிகிறது’ என்றார். லக்னோவில் போட்டி நடைபெற்றிருந்தால் கடவுள் விஷ்ணு மற்றும் வாஜ்பாய் ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்கும். இந்தியா வெற்றி பெற்றிருக்கும். தற்போது, ஆடுகளம் குறித்த சில பிரச்னைகளை கேட்க முடிகிறது.
The post உலக கோப்பை இறுதி போட்டி லக்னோவில் நடந்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும்: அகிலேஷ் யாதவ் சொல்கிறார் appeared first on Dinakaran.