- பெண்கள் T20 ஆசிய கோப்பை
- பாக்கிஸ்தான்
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
- தம்புள்ளை
- பெண்கள் டி 20 ஆசிய கோப்பை தொடர்
- பெண்கள் ஆசிய கோப்பை தொடர்
- இலங்கை
- இந்தியா
- தின மலர்
தம்புல்லா: மகளிர் டி20 ஆசிய கோப்பை தொடரில் யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.8 அணிகள் பங்கேற்கும் மகளிர் ஆசிய கோப்பை தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், யுஏஇ அணிகளும், பி பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் – யுஏஇ அணிகள் தங்களது கடைசி லீக் போட்டியில் மோதின. ஏற்கனவே நடந்த 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த யுஏஇ அணி அடுத்த சுற்றுக்கள் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் தனது கடைசி லீக் போட்டியில் வெற்றி பெறும் நோக்கில் களமிறங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய யுஏஇ அணி பாகிஸ்தான் அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
யுஏஇ அணியின் தொடக்க ஆட்டக்காரரான தீர்த்தா நிலைத்து நின்று ஆடி 36 பந்துகளை 40 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக சாடியா இக்பால், சாடியா இக்பால், துபா ஹாசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
எளிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மூர்க்கமான முனீபா அலி மற்றும் குல் பெரோசா ஆகியோர் களமிறங்கினர். இவர்கள் இருவரும் யுஏஇ அணியின் பந்துவீச்சை எளிமையாக எதிர்கொண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
14.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 107 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் எளிமையாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி ஏ பிரிவின் புள்ளிபட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இரவு 7 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் இந்திய அணி, நேபாள அணியை எதிர்கொள்கிறது.
The post மகளிர் டி20 ஆசிய கோப்பை: யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி appeared first on Dinakaran.