×

சில்லி பாயின்ட்…

சிறார் செஸ்
தமிழ்நாடு மாநில அளவிலான 5வது சிறார் செஸ் போட்டி இம்மாதம் 30ம் தேதி நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெற உள்ள இந்தப்போட்டியில் 8, 10, 12, 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் பங்கேற்கலாம். மேக்ஸ் அகடமி நடத்தும் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் www.registration.tmailchess.com, www.chessentry.in என்ற இணையதளங்கள் மூலமாக பதிவு செய்யலாம்.

சென்னையில் கோல் மழை
சென்னையில் நடைபெறும் அகில இந்திய அளவிலான 14வது ஆண்கள் ஹாக்கி போட்டியில் நேற்று, சி பிரிவில் உள்ள தமிழ்நாடு-அந்தமான் நிகோபர் தீவுகள் மோதின. அதில் அதிரடியாக விளையாடிய தமிழ்நாடு, கத்துக்குட்டி அணியான அந்தமானை 43-0 என்ற கோல் கணக்கில் எளிதில் வீழ்த்தியது.

வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து இடையே 3வது ஒருநாள் ஆட்டம் ஆன்டிகுவாவில் நடந்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 263ரன் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 43 ஓவரில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 267 ரன் விளாசி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் ெவன்றது.

கடற்கரை வாலிபால்
சென்னையில் சர்வதேச கடற்ரை புரோ வாலிபால் போட்டி, இம்மாதம் 21ம் தேதி தொடங்க உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் விடுதி வளாகத்தில் இம்மாதம் 24ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் போட்டியில் இந்தியா, செக் குடியரசு, டென்மார்க், இங்கிலாந்து, எஸ்டோனியா, பிரான்ஸ், இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், லாத்வியா, மொரோகோ, நெதர்லாந்து, நார்வே, போலந்து, ஸ்லோவாகியா, சுவீடன், உக்ரைன் உள்பட, 22 நாடுகளில் இருந்து 32 அணிகள் பங்கேற்கின்றன.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu State Level 5th ,Juvenile Chess Tournament ,Chennai ,Max Academy ,Dinakaran ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...