×

தமிழ்நாட்டுக்கு எதிரான ரஞ்சி போட்டியில் அசாம் நிதான ஆட்டம்


கவுகாத்தி: ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடரில் கவுகாத்தியில் நடைபெற்ற ஆட்டத்தில் அசாம்-தமிழ்நாடு அணிகள் மோதின. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழ்நாடு 7 விக்கெட் இழப்புக்கு 299 ரன் எடுத்திருந்தது. களத்தில் இருந்த முகமது அலி 27, சோனு யாதவ் 12ரன்னுடன் 2வது நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்தனர். இவர்கள் 8வது விக்கெட்டுக்கு 63ரன் சேர்த்தனர். சோனு 29 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குர்ஜாப்னீத் சிங், பிரணவ் ராகவேந்திரா இருவரும் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

அதனால் தமிழ்நாட்டின் முதல் இன்னிங்ஸ் 338 ரன்னில் முடிவுக்கு வந்தது. பின்னர் ஆடிய அசாம் அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் நேற்று 3விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்துள்ளது. தொடக்க வீரர் ரிஷவ் தாஸ் 54ரன் எடுத்தார். தமிழ்நாடு வீரர்கள் குர்ஜப்னீத் சிங், சோனு யாதவ் இருவரும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

The post தமிழ்நாட்டுக்கு எதிரான ரஞ்சி போட்டியில் அசாம் நிதான ஆட்டம் appeared first on Dinakaran.

Tags : Assam ,Ranji ,Tamil Nadu ,Guwahati ,Ranji Cup Test ,Mohammad Ali ,Sonu Yadav ,Dinakaran ,
× RELATED லோடுமேனாக வேலை பார்த்தபடி ஹெராயின் சப்ளை செய்த அசாம் வாலிபர் சிக்கினார்