சென்னை: பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மனிதத்தைக் கொல்லும் போர்களால் வாழ்விழந்து ஏதிலிகளாய் புலம்பெயர்ந்தவர்களை அன்பால் அரவணைப்போம். அகதிகள் முகாம் என்பதை மறுவாழ்வு முகாம் எனப் பெயர் மாற்றியது நமது திராவிட மாடல். அன்னைத் தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம்!. வாழ்வாதாரத்தையும், வாழ்வுரிமையையும் பாதுகாக்கிறோம்! என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
The post பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள்!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு appeared first on Dinakaran.
