தர்பூசணித் தோல் துவையல்

கற்பூரம் இருக்கும் டப்பாவில் சிறிது மிளகைப் போட்டு வைத்தால் விரைவில் கற்பூரம் கரைந்து விடாமல் இருக்கும்.அசைவ உணவை உண்ட பிறகு சிறிது வெல்லம் சாப்பிட்டால் விரைவில் செரிமானம் ஆகிவிடும்.ஊறுகாய் செய்யும் போது உப்பை லேசாக வறுத்துப் போட்டால் ஊறுகாயின் மேல் வெள்ளை நிறம் படியாது.சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசையும் போது சிறிதளவு கடலை மாவையும் கலந்தால் சுவையாகவும், மொருமொருப்பும் கிடைக்கும்.

புளியை பானையில் போட்டு அதன் மீது கொஞ்சம் உப்பைத் தூவி வைத்தால் புளி கெடாமலும், காய்ந்து போகாமலும் இருக்கும்.கத்தரிக்காய் வேக வைக்கும் போது அதனுடன் ஒரு தேக்கரண்டி தயிரைச் சேர்த்துக் கொண்டால் கத்தரிக்காய் கறுக்காது.

சுரைக்காயை வாங்கும் போது நகத்தால் அழுத்தவும். நகம் உள்ளே இறங்கினால் அது இளசு என்று அர்த்தம். சாப்பாட்டில் அடிக்கடி வெங்காயத்தை குண்டாக இருப்பவர்கள் சேர்த்துக் கொண்டால் உடம்பு இளைக்கும். உடம்பை இளைக்க வைக்கும் சக்தி வெங்காயத்துக்கு உண்டு.இட்லி, தோசைக்கு மாவை மிக்ஸியில் அரைப்பதாக இருந்தால் அரிசியை வெந்நீரில் ஊற வைத்து பிறகு அரைத்தால் மாவு சீக்கிரம் அரையும்.

முட்டையை வேக வைக்கும் போது தண்ணீருடன் இரண்டு சொட்டு வினிகர் சேர்த்து வேகவைத்தால் முட்டை உடையாமல் இருக்கும்.அடைக்கு அரைத்த மாவில் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து இட்லித் தட்டில் ஊற்றி வேகவைத்துச் சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். எளிதில் ஜீரணம் ஆகும்.தர்பூசணித் தோலை சிறு சிறு துண்டுகளாக்கி உப்பு தூவி எண்ணெய் விட்டு வதக்கவும். கடுகு, உளுந்து, மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைத்தால் புது விதமான துவையல் ரெடி.

  • எம்.ஏ.நிவேதா, அமுதா அசோக்ராஜா.

The post தர்பூசணித் தோல் துவையல் appeared first on Dinakaran.