வால்டாக்ஸ் சாலையில் கஞ்சா விற்ற 3 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: வால்டாக்ஸ் சாலையில் கஞ்சா விற்ற 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை வால்டாக்ஸ் சாலையில் கஞ்சா விற்பனை நடப்பதாக பூக்கடை போலீசாருக்கு கடந்த 2021 டிசம்பர் 17ம் ேததி செல்போனில் ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, வால்டாக்ஸ் சாலையில் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த உசிலம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் (50), சேப்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் (58), சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த அலாவுதீன் (54) ஆகியோரிடம் போலீசார் சோதனை நடத்தினர். இதில், செந்தில்குமார் வைத்திருந்த பையில் ஒரு கிலோ கஞ்சாவும், ஜோசப் வைத்திருந்த பேக்கில் ஒரு கிலோ கஞ்சாவும், அலாவுதீன் வைத்திருந்த பையில் 1.5 கிலோ கஞ்சாவும் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி.திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய சாட்சியம் மற்றும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் செந்தில்குமார், ஜோசப், அலாவுதீன் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post வால்டாக்ஸ் சாலையில் கஞ்சா விற்ற 3 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை: நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: